ஃபோர்டு கார் தொழிற்சாலை நிர்வாக முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஃபோர்டு கார் தொழிற்சாலை நிர்வாகத்தின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கிவரும் ஃபோர்டு கார் தொழிற்சாலை கடந்த 23 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் தடையில்லாத மின்சாரம் ,தடை இல்லாத தண்ணீர் இலவசமாக உற்பத்திக்கான இடம் என அனைத்தையும் வழங்கிய அப்போதைய அரசு உற்பத்தியை துவக்கி பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி தற்போது உற்பத்தியை நிறுத்தப்போவதாக தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனை கண்டித்து மறைமலைநகர் பேருந்து நிலையம் முன்பு சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஃபோர்டு தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிற்சாலை ஊழியர்கள் சிஐடியு நிர்வாகிகள் என 150க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ் கண்ணன் அளித்த பேட்டியில்....செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டு கம்பெனி நிறுவனங்கள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் இங்கு வந்து தொழில் தொடங்கி உற்பத்தியை பெருக்கி லாபம் ஈட்டி நஷ்டம் என்று பொய்யான தகவலைக் கூறி லாபம் ஈட்டி செல்கின்றது.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கிய நோக்கியா போன்ற நிறுவனங்கள் வரிசையில் தற்போது ஃபோர்டு நிறுவனமும் சேர்ந்து உள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த நிறுவனத்தை நம்பி உள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சென்னை புறநகர் பகுதியான மறைமலைநகர் பகுதிவாசிகளுக்கு மட்டுமல்லாது மாவட்டத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உள்ளதாக கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu