செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள் குவிப்பு : துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள் குவிப்பு : துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
X

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில்  கொட்டப்பட்டுள்ள இறைச்சிக்கழிவுகள்.

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள் குவிப்பு துர்நாற்றத்தால் மக்கள் .தவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தேதிய நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளில் வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, கோழி மற்றும் வாத்து இறைச்சி கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன.

இங்கிருந்து இறைச்சிக் கழிவுகளை கொண்டு வந்து சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால், துர்நாற்றம் தாங்க முடியாமல் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.மேலும், நாய்களும் கூட்டமாக திரிகின்றன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதுமட்டுமல்லாது, வேதநாராயணபுரத்தில் இருந்து பழவேலி செல்லும் வழி போன்ற பகுதிகளில், கழிவுகள் கொட்டப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் கழிவு கொட்டப்படுவது குறைந்து இருக்கிறது. இருந்தபோதும் ஏற்கனவே கொட்டிய இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story