உக்ரைனில் தவிக்கும் மகளை மீட்க பிரதமர், முதல்வருக்கு கோரிக்கை

உக்ரைனில் தவிக்கும் மகளை மீட்க பிரதமர், முதல்வருக்கு கோரிக்கை
X
உக்ரைனில் தவிக்கும் மகளை மீட்டுத்தர பிரதமர் முதல்வர் ஏற்பாடு செய்ய ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் நேதாஜி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்திவருகிறார். இவருடைய மகள் ஹாஜிதாபானு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் உக்ரைன் நாட்டு மீது ரஷ்யா கடந்த சில தினங்களாக போர் நடத்தி வருகிறது. இதில் தனது மகளையும் அங்கு படித்து வரும் 5,000 மாணவிகளையும் மீட்டுத்தர பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், எங்களது மகள் ஹாஜிதா பானு நேற்று முன்தினம் இரவு எங்களுக்கு வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் தற்போது 5000 மாணவ மாணவிகள் நடுங்கும் குளிரில் உணவின்றி தவித்து வருகிறோம். நாங்கள் இந்தியாவுக்கு ரஷ்யா வழியாக வர 40 கிலோமீட்டர் தான் ஆனால் ரஷ்யா வழியாக செல்வதற்கு அதிபர் ஜெலன்ஸ்கி அனுமதி கொடுக்க மறுக்கிறார்.

எனவே ரஷ்யா வழியாக நாங்கள் கடந்து வர பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆகியோர் ரஷ்யா உக்ரைன் நாட்டு அதிபர்களிடம் பேசி ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil