செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 410 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 410 பேருக்கு கொரோனா
X
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 410 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 410 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மீண்டும் கொரொனா கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 148 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 839 ஆக உயர்ந்தது.

2,936 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!