செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்
X

செங்கல்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே திரண்டுள்ள கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சித் தேர்தல் 6 மற்றும் 9ந் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மனிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.

செங்கல்பட்டு மல்ரோசா புரத்திலுள்ள சி.எஸ்.ஐ. இவெர்ட் மகளிர் கிறுத்துவ கல்லூரி, இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பவுஞ்சூர் சென்ஜோசப் உயர்நிலைப் பள்ளியில், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு நெல்வாய் ஏ.சி.டி. பொறியியல் கல்லூரி, புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு கிழக்கு தாம்பரத்திலுள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளியில், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாமல்லபுரத்திலுள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு படூர் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பதிவான வாக்குகளை காலை காலை 8.00 மணிக்கு அந்தந்த வாக்கு வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது, மேலும் 8 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணுவதற்கு மொத்தம் 1107 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது, அதில் 3,533 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் 815 சி.சி.டிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு இப்பணியை கண்காணிக்கப்பட்டு வருகிறது, மேலும் ஒரு மையத்திற்கு 6 நுண்பார்வையாளர்கள் வீதம் எட்டு வாக்கு எண்ணும் மையங்களிலும் 48 நுண்பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் பணியினை கண்கணித்து வருகின்றனர்.

தற்போது, மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு பதிவான வாக்குகளை தனித்தனியாக பிரித்து வாக்கு என்னும் பணிகள் துவன்கின. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி