செங்கல்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 130.1 மி.மீ. மழை பதிவு

செங்கல்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 130.1 மி.மீ. மழை பதிவு
X

பைல் படம்.

செங்கல்பட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 130.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று இரவு மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து பரவலாக காலை வரை மழை பெய்தது.

மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர்-11.4, மி.மீ, செங்கல்பட்டு-34.5 மி.மீ, திருக்கழுக்குன்றம்-38.2 மி.மீ, மாமல்லபுரம்-23 மி.மீ, மதுராந்தகம்-2 மி.மீ, செய்யூர்-6 மி.மீ, தாம்பரம்-3.2 மி.மீ, கேளம்பாக்கம்- 11.8 மி.மீ மழை என மொத்தம் 130.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil