/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 188.7 மி.மீ. மழைப்பதிவு

விடிய விடிய மழை பெய்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 188.7 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 188.7 மி.மீ. மழைப்பதிவு
X
கோப்பு படம் 

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செங்கல்பட்டில் நேற்று இரவு சுமாா் 1.30 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்: திருப்போரூர்-6.3, மி.மீ, செங்கல்பட்டு-19, மி.மீ, திருக்கழுக்குன்றம்-14.2 மி.மீ, மாமல்லபுரம்-11 மி.மீ, மதுராந்தகம்-61 மி.மீ, செய்யூர்-49, மி.மீ, தாம்பரம்-1.4, மி.மீ, கேளம்பாக்கம்- 26.8 மி.மீ மழை என மாவட்டத்தில் மொத்தம் 188.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Updated On: 3 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...