செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை
X

 சுமார் 14 மணிநேரம் இடைவிடாது பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று முதல் தமிழகத்தில் பல்வேறு கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் செங்கல்பட்டில் நேற்று காலை முதல் வான மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் விடிய விடிய மிதமான மழை பெய்தது.

மதுராந்தகம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர், சோழிங்கநல்லூர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று தொடர்ந்து மழை பெய்தது. அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுமார் 14 மணிநேரம் இடைவிடாது பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 351.7 மி.மீ. மழை பதிவு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 351.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று மதியம் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 14 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்.. திருப்போரூர்-42.4, மி.மீ, செங்கல்பட்டு-39, மி.மீ, திருக்கழுக்குன்றம்-25.7 மி.மீ, மாமல்லபுரம்-௩௯.4 மி.மீ, மதுராந்தகம்-26 மி.மீ, செய்யூர்-16, மி.மீ, தாம்பரம்-69, மி.மீ, கேளம்பாக்கம்- 94.2 மி.மீ மழை என மாவட்டத்தில் மொத்தம் 351.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!