செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 219.4 மி.மீ. மழை பதிவு
கோப்பு படம்
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று மாலை 4 மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் இருந்து மழை பெய்தாலும், மாலை 4 மணி முதல், இன்று காலை வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): செங்கல்பட்டு- 7, மி.மீ, திருப்போரூர்-21, மி.மீ, திருக்கழுக்குன்றம்-25 மி.மீ, மாமல்லபுரம்-46.4. மி.மீ, மதுராந்தகம்-33 மி.மீ, செய்யூர்-39.2, மி.மீ, தாம்பரம்- 10,மி.மீ, கேளம்பாக்கம்- 37.6 என மாவட்டத்தில் மொத்தம் 219.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu