செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக இடியுடன் பலத்த மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக இடியுடன் பலத்த மழை
X
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் செங்கல்பட்டில், நேற்று நள்ளிரவு முதல் வான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இன்று காலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. இடியுடன் பெய்த மழை, தொடர்ந்து பகல் முழுவதும் நீடித்தது.

இந்த மழையானது செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர், சோழிங்கநல்லூர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நீடித்தது. மாலையிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்தது. இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது; இடைவிடாது பெய்த மழை காரணமாக, மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்