ஈசூர் - வள்ளிபுரம் இடையே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

ஈசூர் - வள்ளிபுரம் இடையே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்
X

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலம். 

பாலாறு வெள்ளத்தால், செங்கல்பட்டு மாவட்டம், ஈசூர் - வள்ளிபுரம் இடையே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

செங்கல்பட்டு சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால், ஓடைகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள வள்ளிபுரம் தடுப்பணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பாயும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இதன் காரணமாக, திருக்கழுக்குன்றத்தில் இருந்து கருங்குழி வழியாக மதுராந்தகம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. தடுப்பணை அமைந்துள்ள பகுதியில் இருந்து, அதன் பின் பக்கவாட்டில் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஈசூர், பூதூர், பள்ளிப்பட்டு ஆகிய கிராமங்கள் வரை, சுமார் 3 கிமீ தூரத்துக்கு பாலாற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், பல கிலோமீட்டர் தொலைவு சுற்றுச் சென்று, அங்குள்ள மேம்பாலத்தின் வழியாக மற்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

இதனிடையே, ஈசூர் - வள்ளிபுரம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலத்தின் வழியாக, பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று, பொதுப்பணித் துறையினரும், காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story