Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு: சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஓவியம்- குழந்தைகள் அசத்தல்!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓவியம் வரைந்த குழந்தைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
HIGHLIGHTS

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மழைலைகள் ஞானேஷ்வர், ஷாமினி.
மனிதன் நாளுக்கு நாள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தன் அறிவுக்கு தானே அடித்தளமிட்டு வருகிறான். நமது வருங்கால சந்ததிக்கு இயற்கையான உலகை விட்டுச் செல்ல வேண்டும் என்றால் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. அதை சகலரும் உணரும் நோக்கில் செயல்பட வேண்டும் என்பதை சுற்றுச்சூழல் தினமான இன்றைய இந்நாளில் உறுதி கொள்வோம்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன், கவிதா தம்பதியரின் குழந்தைகள் ஞானேஷ்வர் மற்றும் ஷாமினி ஆகிய இருவரும், சுற்றுச்சூழல் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குழந்தைகளை பாராட்டி வருகிறார்கள்.