செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்

மாவட்ட கலெக்டர் அலுவலகம் செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வட்டாட்சியர் நிலையில், நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்களை பணி மாறுதல் செய்து உத்த்ரவிடப்பட்டுள்ளது. இதில் செங்கல்பட்டு வட்டாட்சியராக இருந்த இரா. ராஜேந்திரன் பணிமாற்றம் செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது அலுவலக மேலாளராக பணியாற்றிவந்த ஆ. வாசுதேவன் செங்கல்பட்டு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் தனி வட்டாட்சியராக இருந்த இல. சிவசங்கரன் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியராகவும், பல்லாவரம் நகர வரித்திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய நடராஜன் மதுராந்தகம் வட்டாட்சியராகவும், ஆலந்தூர் நகர்புற வளர்ச்சித்திட்ட தனி வட்டாட்சியராக இருந்த ராஜன் திருப்போரூர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, கோயம்பேடு மெட்ரோ இரயில், தனி வாட்டாட்சியராக இருந்த வெங்கட்ரமணன் மணி மாறுதல் செய்யப்பட்டு, செய்யூர் வட்டாட்சியராகவும், செய்யூர் வட்டாட்சியராக இருந்த இராஜா பணிமாறுதல் செய்யப்பட்டு பல்லாவரம் வட்டாட்சியராகவும், திருப்போரூர் வட்டாட்சியராக இருந்த இரஞ்சினி செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணி மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து வட்டாட்சியர்களும் உடனடியாக பணியில் சேரவேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu