செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் விற்ற கணவன்-மனைவி கைது!

செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் விற்ற கணவன்-மனைவி கைது!
X

கள்ளச்சாராயம் விற்றதாக கைதான கணவன்-மனைவி

செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராய விற்பணையில் ஈடுபட்ட கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக செங்கல்பட்டு எஸ்.பிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்போரூர் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் ஏரிக்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், முள்ளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணவன்-மனைவியான கன்னியப்பன் (37), சுந்தரி (32) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள, 35 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மறைமலை நகரை சேர்ந்த பூச்சி ராஜேந்திரன் என்பவரிடம் கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது, இதையடுத்து, தலைமறைவாக உள்ள பூச்சி ராஜேந்திரனையும் போலீசார் தேடிவருகின்றனர். கள்ளச் சாராயம் விற்ற கணவன் மனைவி இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்பு சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி