கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்..!

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்..!
X
செங்கல்பட்டு நகர பகுதிகளில் வடிகால் வாரியம் இல்லாததால், மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் செங்கல்பட்டு நகர பகுதியில் பெய்த கனமழை காரணமாக செங்கல்பட்டு மதுராந்தகம் முக்கிய ஜிஎஸ்டி சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் வரதராசனார் வீதி வேதாசலம்நகர் ராட்டின கிணறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் கடைகள், வீடுகளுக்குள் புகுந்து கடுமையான சேதத்தை விளைவித்தது.

ஆண்டுதோறும் சிறு மழைக்கே செங்கல்பட்டு நகர பகுதிகளில் வடிகால் வாரியம் இல்லாததால், மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர். எனவே வடிகால்களை உடனடியாக தூர்வாரி வெள்ளநீர் வடிவதற்கான வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!