ஆடி மாதம் முதல் வெள்ளி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் முதல் வெள்ளி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் ஆடி வெள்ளிக் கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ஆடி மாத வெள்ளி செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோயில்களில் கூழ் வார்த்தல் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும்.

இந்த ஆண்டு ஆடி மாதம் கடந்த வாரம் துவங்கியது. இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டன.

இதன்படி மதுராந்தகம் அருகே உள்ள புதூர் கிராமத்தில் அமைந்திருக்கும் சாமுண்டீஸ்வரி பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடும்பாடி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை இன்று ஏராளமானோர் காப்புகட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!