தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட தேர்தல் அலுவலர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட தேர்தல் அலுவலர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள பொதுவழிமுறைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முறையாக பின்பற்றிட வேண்டும்.
மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் நடத்தவுள்ள கூட்டம் குறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்து உரிய ஆவணங்களுடன் இணைய வழியில் விண்ணிப்பிக்க வேண்டும். மேலும் ஊர்வலங்கள், ஒலிபெருக்கி பயன்படுத்துதல் மற்றும் வாகனங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
வாக்குப்பதிவின் போது தேர்தல் பணி அலுவலர்கள் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்தி முடிக்க அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசு பொது கட்டடங்களில் எழுதவோ, போஸ்டர் ஒட்டவோ கூடாது. எனவே அனைத்து கட்சிகளும் தோ்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, தோ்தலை அமைதியாக நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ராகுல்நாத் கேட்டுக்கொண்டார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu