குடியிருப்பிலிருந்து பைப்புகளை திருடியவர் கைது

குடியிருப்பிலிருந்து பைப்புகளை திருடியவர் கைது
X

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பகுதியில் பி.வி.சி பைப்புகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பகுதியில் தனியார் குடியிருப்பு கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கில் உள்ளதால் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்று வந்த கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அக்கட்டிட பணிகளுக்கு உபயோகப் படுத்துவதற்காக வைத்திருந்த பி.வி.சி பைப்புகளை ஒருவர் திருடி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கட்டிட வளாகத்தில் வைத்திருந்த பி.வி.சி பைப்புகளை மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இருப்பதை கண்டு சுற்றி வளைத்து கையும் களவுமாக கைது செய்தனர்.

பின்பு அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் சென்னை சூலபள்ளம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த விஜயகுமார்(45) என்பதும் இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி