கலெக்டர் ஆபீஸ் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்

கலெக்டர் ஆபீஸ் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்
X

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பழைமை வாய்ந்த சக்தி விநாயகர் கோயில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

செங்கல்பட்டில் உள்ள விநாயகர் கோவில் கலெக்டர் ஆபீஸ் பிள்ளையார் கோயில் என மக்களால் போற்றப்பட்டு வந்தது. பல சிறப்புகள் வாய்ந்த இந்தக் கோயிலுக்கு கடந்த 27.01.2002-ல் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் புதுப்பிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக ஹோமங்கள் பூஜைகள் நடத்தப்பட்டு புதிதாக அன்னதானக் கூடமும் கட்டப்பட்டு, முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற அதே நாளில் இன்று காலை 10 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!