செங்கல்பட்டு மாவட்டத்தில் 152.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் 152.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது
X
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 152.1 மி.மீ. மழை பெய்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 152.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று இரவு மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து விடியற்காலை வரை சுமார் 5மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்..(மில்லி.மீட்டரில்)

திருப்போரூர்-10.3, மி.மீ, செங்கல்பட்டு-6.3 மி.மீ, திருக்கழுக்குன்றம்-9.3 மி.மீ, மாமல்லபுரம்-16 மி.மீ, மதுராந்தகம்-7 மி.மீ, செய்யூர்-13 மி.மீ, தாம்பரம்-29 மி.மீ, கேளம்பாக்கம்- 61 மி.மீ மழை என மாவட்டத்தில் மொத்தம் 152.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future