மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
பைல் படம்.
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டதில் மாற்றங்கள் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார் என்றும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார் என்றும் தமிழக அரசு பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu