ரயில் சேவையில் மாற்றம் ஆகஸ்ட் 14 வரை நீடிக்கும்: தெற்கு ரயில்வே
தாம்பரம் ரயில்வே யார்டில் அடுத்த மாதம் 14ம் தேதி வரை மேம்பாட்டுப்பணிகள் நடக்கவுள்ளன. இதன் காரணமாக, கடந்த 23ம் தேதி முதல் 31ம் தேதிவரை நீண்ட தொலைவு, வெளி மாநில ரயில் சேவையில் மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
அதன்படி, தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்தும், சில வடமாநில ரயில்கள் மாற்று பாதைகளிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட்14 வரை ஒரு சில ரயில்களை ரத்து செய்வதாகவும், சில ரயில்களை மாற்று பாதைகளில் இயக்குவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம்:
- தாம்பரம் - நாகர்கோவில் இடையேயான அந்தியோதியா விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ஆகஸ்ட்1 முதல் ஆகஸ்ட் 14 வரை முழுமையாக ரத்து.
- எழும்பூர் - சேலம் அதிவிரைவு ரயில் ஆகஸ்ட் 1 - 14 வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
- ஆகஸ்ட் 3,10 ஆகிய தேதிகளில் திருச்சி - ஜோத்பூர் பகத் கி ஹோத்திஹம்சபர் வாராந்திர விரைவு ரயிலும்,
- ஆகஸ்ட் 4, 11 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம்- அயோத்தி கன்டோன்மென்ட் சாரதே சேது அதிவிரைவு ரயிலும்,
- ஆகஸ்ட் 7ல் ராமேஸ்வரம் அயோத்தி ரயிலும்,
- ஆகஸ்ட் 7, 14-ல் புதுச்சேரி புதுடில்லி வாராந்திர விரைவு ரயிலும்,
- ஆகஸ்ட் 7-ல் ராமேஸ்வரம் பனாரஸ் ரயிலும்,
- ஆகஸ்ட் 8-ல் செங்கல்பட்டு - காரைக்கால் ரயிலும்
வழக்கமாக வந்து செல்லும் தாம்பரம், எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மற்றும் பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.
மும்பை குர்லா லோகமான்ய திலக் காரைக்கால் விரைவு ரயில் ஆகஸ்ட் 3,10 ஆகிய தேதிகளில் திருத்தணி, மேல்பாக்கம் கேபின், செங்கல்பட்டு வழியாகவும்,
புதுச்சேரி - காச்சிக்குடா விரைவு ரயில் ஆகஸ்ட் 8-ல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மேல்பாக்கம் கேபின் வழியாகவும் இயக்கப்படும்.
தென்மாவட்ட ரயில்கள்
- எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயிலும், காரைக்குடி செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயிலும் ஆகஸ்ட் 1 - 14 வரை இருமார்க்கத்திலும் செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும்.
- எழும்பூரில் இருந்து இரவு 11.35 மணிக்கு திருச்சி செல்லும் மலைக்கோட்டை விரைவு ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14 வரை நள்ளிரவு 12.40 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
- தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் விரைவு ரயில் ஆகஸ்ட் 1,4,6,8,11,13 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் விழுப்புரத்திலேயே நிறுத்தப்படும்.
- நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில் ஆகஸ்ட் 4, 5, 7, 11, 12, 14 ஆகிய தேதிகளில் தாம்பரத்துக்கு பதிலாக எழும்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 1, 5, 6, 8, 12, 13 ஆகிய தேதிகளில் எழும்பூரில் நிறுத்தப்படும்.
- எழும்பூர் மங்களூர் விரைவு ரயில் ஆகஸ்ட் 1 – 14 வரை இரு மார்க்கத்திலும் திருச்சியில் இருந்து இயக்கப்படும்.
- தாம்பரத்தில் இருந்து சந்திரகாச்சி செல்லும் அயோத்தி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் ஆகஸ்ட் 5, 12 ஆகிய தேதிகளில் கடற்கரை வரையும், ஆகஸ்ட் 7, 14 ஆகிய தேதிகளில் எழும்பூர் வரையும் இயக்கப்படும்.
- தாம்பரம் - ஹைதராபாத் விரைவு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu