தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில் சேவையில் மாற்றம்

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில் சேவையில் மாற்றம்
X

கோப்புப்படம் 

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஜூலை 31ம் தேதி வரை செங்கல்பட்டு, விழுப்புரத்துடன் நிறுத்தப்படும்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை செங்கல்பட்டு, விழுப்புரத்துடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் சென்னை ரயில்வே கோட்டத்தின் தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தும் பணி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 18 வரை நடைபெறவுள்ளது. இதனால், தாம்பரம் வழியாக செல்லும் ரயில் சேவை ஜூலை 31 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில், நாகா்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31ம் தேதி வரையும், மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31ம் தேதி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

சேவை மாற்றம்: எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்ஃபோர்ட் விரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31 தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 22, 24, 26, 27, 29, 31 தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் ஜூலை 24, 25, 28, 30 தேதிகளில் தாம்பரம் வருவதற்கு பதிலாக விழுப்புரத்துடன் நிறுத்தப்படும்.

மங்களூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து புறப்பட்டு மங்களூா் சென்றடையும். எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சேலம் செல்லும் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.

வெளிமாநில ரயில்கள்: தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் தாம்பரம் வழியாக செல்வதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூா், கூடூா் வழியாக இயக்கப்படவுள்ளன. இதில் புதுச்சேரி-புதிதில்லி விரைவு ரயில் மற்றும் ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ரயில் ஜூலை 24, 31 தேதிகளிலும், திருச்சி- ஹம்சாபா் விரைவு ரயில் மற்றும் மும்பை-காரைக்கால் விரைவு ரயில் ஜூலை 27-ஆம் தேதியும் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும்.

ராமேஸ்வரம்-அயோத்யா கண்டோன்மென்ட் விரைவு ரயில் ஜூலை 28-ஆம் தேதியும் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும்.

ஹைதராபாத்-தாம்பரம் சார்மினார் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31ம் தேதி வரையும், சந்திரகாச்சி அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 22, 29 தேதிகளிலும் சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக கடற்கரையில் இருந்து இந்த ரயில்கள் இயக்கப்படும்.

தொடா்ந்து ஆகஸ்ட்1ம் தேதிக்கு பிறகு ரயில் சேவையின் மாற்றம் குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself