Chance of Heavy Rain- இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Chance of Heavy Rain- இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு;  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
X

Chance of Heavy Rain- தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு (கோப்பு படம்)

Chance of Heavy Rain- தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (நவ.6) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chance of Heavy Rain,Tamil Nadu- தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று திங்கள்கிழமை (நவ.6) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இம்மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெய்த மழை அளவு (மி.மீ.) : வால்பாறை 130, வீரபாண்டி (தேனி), தொண்டி (ராமநாதபுரம்) தலா 110, போடி (தேனி), செங்கோட்டை (தென்காசி), திருப்பூா் தலா 100, தம்மம்பட்டி (சேலம்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), ராமநாதபுரம், எடப்பாடி (சேலம்), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 90,

ஆண்டிபட்டி (தேனி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), மோகனூா் (நாமக்கல்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூா்) தலா 80, பவானி (ஈரோடு), சின்னக்கல்லாா், பில்லூா் அணை மேட்டுப்பாளையம் (கோவை), புலிப்பட்டி (மதுரை), மொடக்குறிச்சி , குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), ஆம்பூா் (திருப்பத்தூா்), சங்கரி துா்க்கம் (சேலம்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ஆா்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), பாம்பாா் அணை (கிருஷ்ணகிரி) தலா 70,

சோலையாா், சின்கோனா (கோவை), காட்பாடி (வேலூா்), கெத்தை, குந்தா பாலம் (நீலகிரி), கோபி, நம்பியூா், கொடிவேரி (ஈரோடு), எருமைப்பட்டி , பரமத்திவேலூா் (நாமக்கல்), சுருளோடு (கன்னியாகுமரி), இளையான்குடி (சிவகங்கை), சிட்டம்பட்டி (மதுரை) தலா 60.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:

இன்று திங்கள்கிழமை (நவ.6)அரபிக்கடல் பகுதிகளான கேரளம் - தெற்கு கா்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்