/* */

மக்களே உஷார்..!: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 29, 30-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில், 11 மாவட்டங்களில் வரும் 29, 30 ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

HIGHLIGHTS

மக்களே உஷார்..!: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 29, 30-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு
X

சென்னை மண்டல ஆய்வு மையம்.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி, காற்று வேக மாறுபாடு, வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், நாளை மறுநாள் 29 மற்றும் 30 ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த மாதம் (ஜூலை) 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Updated On: 27 Jun 2022 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்