நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு
X
பைல் படம்.
By - B.Gowri, Sub-Editor |23 Feb 2023 2:30 PM IST
டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஏற்கெனவே 19 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி உள்ள நிலையில், ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu