புதுவைப் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றத்திற்கான மையம் தொடக்கம்
புதுவைப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை தலைவர் முனைவர் ஏ சுப்பிரமணியம் ராஜூ இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, புதுவைப் பல்கலைக்கழகத்தின் கல்விப் புதுமைகள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு இயக்குநர் (பொறுப்பு), ஐகியூஏசி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.தரணிக்கரசு தொடக்க உரையாற்றினார்.
சிஎஸ்சிஎஸ் மையத்தின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான முனைவர் மதிமாறன் நடராஜன், மையத்தின் நோக்கம், கண்ணோட்டத்தை வழங்கினார். காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த ஆய்வு, கல்வி மற்றும் கொள்கை உரையாடலில் மையத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் குர்மீத் சிங், தற்போதைய உலகளாவிய சூழலில் மையத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் இந்த நிகழ்வில், புதுவைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் ராஜ்நீஷ் பூதானி மற்றும் புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர் டி ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்தியாவின் பெங்களூருவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தூதரக ஆலோசகர் ஜோனாஸ் புருன்ச்விக், கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு, நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்துறையில் உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வு புதுவைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் துறையின் இணைப் பேராசிரியரும், முனைவர் நந்த கிஷோர் நன்றியுரை கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu