காவிரி நீர் ஆணைய செயல்பாடு: அமைச்சர் துரைமுருகன் கண்டிப்பு

காவிரி நீர் ஆணைய செயல்பாடு: அமைச்சர் துரைமுருகன் கண்டிப்பு
X

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

மேகதாது அணை விவகாரத்தில், காவிரி நீர் ஆணைய செயல்பாட்டுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மெட்டுக்குளம் பகுதியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: மேகதாது அணை விவகாரத்தில் காவிரி ஆணையத்தின் செயல்பாடு சட்ட விரோதமானதாக உள்ளது. அதேசமயத்தில் சுற்றுச்சூழல் துறை மேகதாது அணை விவகாரத்தை நீக்கியுள்ளது மகிழ்ச்சி தரக்கூடியது.

முதல்வர் ஸ்டாலின் வரும் 28 ம் தேதி திருப்பத்தூர், வேலூரில் நடைபெறும் விழாக்கள், 29ம் தேதி ராணிப்பேட்டையில் நடக்கும் விழாக்களில் பங்கேற்கிறார். குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை தி.மு.க., ஆதரிக்கிறது. சமூக நீதியில் ஈடுபாடு உள்ள கட்சி தி.மு.க.,. நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. இவ்வாறு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.

அண்மையில், தஞ்சாவூருக்கு வந்த காவிரி நீர் ஆணையத்தின் தலைவர் ஹல்தர், மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், அப்படி நீதிமன்ற வழக்கில் இருக்கும்போது விவாதித்தால் அது சட்டவிரோதமானது என கண்டித்திருந்தார். இதையடுத்து, முதல்வரை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் ஆணையத்தை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story