உங்கள் மொபைல் போனிலேயே ஜாதி, வருமானம், இருப்பிட, வாரிசு சான்றிதழ்கள்

தமிழகத்தில் ஜாதி, வருமானம், இருப்பிட, வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்களை பெற மக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் செல்லவேண்டிய சூழ்நிலை தற்போது இருந்து வருகிறது. இதனை பெற தொழிலாளர்களும் விவசாயிகளும் பெரும் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. இதனால் சிலர் கடும் சிரமத்திற்கும் உள்ளாகியும் வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு இந்த சான்றிதழ்களை சுலபமாகப் பெறவும், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, மக்களுக்கு இணக்கமான வெளிப்படைத்தன்மையுடன் சேவைகளை இணையத்தின் மூலம் வழங்கி வருகிறது. அதன்படி தங்களின் மொபைல் போனிலிருந்தே ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை விண்ணப்பித்து பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
உங்களுடைய மொபைல் போனில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx# என்ற இணையதள முகவரியில் சென்று Signin -ஐ கிளிக் செய்து உங்களின் விபரங்களை டைப் செய்து Signup கொடுக்க வேண்டும்.

இதனையடுத்து, மீண்டும் Home Page-க்கு சென்று உங்களுடைய user name, password கொடுத்து உள் நுழைய வேண்டும். அல்லது உங்கள் மொபைல் எண் பதிவு செய்து அதில் வரும் ஓடிபி எண் மூலமும் உள் நுழையலாம்.

பின்னர் வரும் திரையில் Services காலத்தில் சென்று Revenue department என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


இதில் உங்களுக்கு எந்த விதமான சேவைகள் தேவை என்பதை கிளிக் செய்தால், அதனுள் சேவை கட்டணம், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு கீழே உள்ள Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அந்த பக்கத்தில் Applicant CAN Number/ குடிமக்கள் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அங்கேயே குடிமக்கள் கணக்கு எண் பதிவு செய்வதற்கான ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு சேவைகளுக்கும் ரூ.60 கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். விண்ணப்பித்த சில நாட்களுக்குள் உங்களுடைய சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu