போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம்: நீதிமன்றத்தில் வழக்கு

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம்: நீதிமன்றத்தில் வழக்கு
X

சென்னை உயர்நீதிமன்றம்.

Traffic Rules in Tamil -போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Traffic Rules in Tamil -போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது

போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு, திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த புதிய அபராத தொகையை பல மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, போக்குவரத்து காவல்துறையினர் புதிய அபராதத்தை வசூலிக்கத் தொடங்கி உள்ளனர். சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:- போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்தபோதிலும், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக காவல்துறையினர் அப்பாவி மக்களை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!