நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்:  அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு
X

அர்ஜுன் சம்பத்.

தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும்.

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது ஒருவர் தாக்குவதுபோல வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதியை மகா காந்தி என்பவர் தாக்கியது தெரியவந்தது. விஜய் சேதுபதியும், மகா காந்தி என்ற நபரும் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது மகா காந்தி விஜய் சேதுபதியிடம் " தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் " என கூறினாராம். அதற்கு விஜய் சேதுபதி "இது தேசியமா?" என கேட்டதாகவும், அதன் பிறகு குரு பூஜை வந்திருக்கிறீர்களா என கேட்டாராம் மகா காந்தி. அதற்கு விஜய் சேதுபதி "யார் குரு ?" என கேட்டாராம். மேலும் நீங்கள் குரு என சொல்லும் நபர் "ஜூவிஸ் கார்பெண்டர்" என நக்கலாக பதிலளித்தாராம் விஜய் சேதுபதி. பசும்பொன் முத்துராமலிங்கர் தேவரை பின்பற்றும் எனக்கு அவர் கூறிய எதுகையான வார்த்தைகள் வலியை கொடுத்ததால்தான் அப்படி செய்தேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 7 ம் தேதி இந்து மக்கள் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில், "தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும் என அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு 1 உதை = ரூ.1001/-" என பதிவிடப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் திரைக் கலைஞர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு 1001 ரூபாய் வழங்கப்படும் என பதிவிட்ட இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை கடைவீதி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பொது அமைதியை சீர்குலைப்பது, மிரட்டல் விடுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!