முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27-ல் அமைச்சரவை கூடுகிறது..!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27-ல் அமைச்சரவை கூடுகிறது..!
X
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27ல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மேலும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக ஆளுனர் ரவி நிலைப்பாடு, செயல்பாடு, மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் தமிழக அரசின் எதிர்ப்பு நிலை, ராஜீவ் கொலை வழக்கில் மீதம் உள்ளவர்கள் விடுதலை விவகாரம், மேகதாது அணை,ஸ்டெர்லைட் ஆலை விற்பனை விவகாரம் என, பல்வேறு விவகாரங்கள் பலத்த சர்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில் அமைச்சரவை கூட்டம் கூடுவது மேலும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

Next Story
why is ai important to the future