முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
X

முதல்வர் ஸ்டாலின் (பைல் படம்)

பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் விவாதத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள். குறிப்பாக, சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என தெரிகிறது. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்