வாணியம்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் உயிரிழப்பு
X
வாணியம்பாடி அருகே அரசு விரைவுப் பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூரில், பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தும், பெங்களூரை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அரசுப் விரைவுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 4 ஆண்கள், ஒரு பெண் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகள் அவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த நிலையில், பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளான சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!