தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு
பைல் படம்
தமிழகத்தில் பேருந்து கட்டணம் விரைவில் உயரும் என்று கூறப்படும் நிலையில் எவ்வளவு உயரும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. சூழ்நிலைக்கேற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் நேரு கூறினார்.
ஆனால், கட்டண உயர்வு குறித்து கசிந்த தகவல்படி, பேருந்து கட்டணம் பின்வருமாறு இருக்கும் என தெரிகிறது
சென்னையிலிருந்து திருச்சிக்கு சாதாரண பேருந்தில் கட்டணம் இதுவரை 175 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 265 ரூபாயாக உயரும். நெல்லைக்கு 325 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 460 ரூபாயாக உயரும். சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் சாதாரணப் பேருந்துகளின் கட்டணம் தற்போது 380 ரூபாயாக உயரும்.
டீலக்ஸ் பேருந்துகளில் திருச்சிக்கு செல்லும் கட்டணங்கள் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், மதுரைக்கான கட்டணம் 330 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும் உயரும். நெல்லைக்கான கட்டணம் 540 ரூபாயாகவும், கோவைக்கான கட்டணம் 430 ரூபாயாகவும் அதிகரிக்கும். .
அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல 300 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 380 ரூபாயாக இருக்கும். மதுரைக்கான கட்டணம் 529 ரூபாயாகவும், நெல்லை செல்வதற்கான கட்டணம் 550 ரூபாயாகவும், கோவைக்கான கட்டணம் 365 ரூபாயிலிருந்து 540 ரூபாயாகவும் இருக்கும். .
குளிர்சாதன பேருந்துகளை பொறுத்தவரை சென்னையிலிருந்து திருச்சிக்கான பேருந்து கட்டணம் 450 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயரும். சென்னையிலிருந்து மதுரைக்கான கட்டணம் 500 ரூபாயிலிருந்து 725 ரூபாயாகவும், நெல்லைக்கான கட்டணம் 600 ரூபாயிலிருந்து 850 ரூபாயாகவும் கோவைக்கான கட்டணம் 525 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் உயரக்கூடும்.
இது குறித்து கமென்ட் அடித்த திருவாளர் பொதுஜனம், பெண்களுக்கு இலவசம், அவர்கள் வீட்டு ஆண்களுக்கு இருமடங்கு என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu