இன்றைய சிந்தனை.( 08.04.2019 ) எறும்பிடமும் பாடம் கற்கலாம்..

இன்றைய சிந்தனை.( 08.04.2019 ) எறும்பிடமும் பாடம் கற்கலாம்..
X
பிறக்கும் போது எதையும் கொண்டு வருவது இல்லை. மற்றவருக்கு உதவுவதால் எதையும் இழந்து விடப் போவதும் இல்லை.

இந்த உலகில் உள்ள எதுவும் நமக்கு சொந்தமில்லை என்பது நாம் மண்ணுடன் போகும் போது மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதற்கு முன் நம் அறிவுக்குத் தெரிந்தாலும் நம் மனம் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஏனெனில் நாம் வாழும் போது, இது எனக்குச் சொந்தம், அவை எனக்கு உரியவை, இவை எனக்கு உரியவை என அனைத்தின் மீதும் உரிமைக் கொண்டாடுகிறோம், ஆனால், இது எதுவும் இறுதியில் நம்முடன் வருவதும் இல்லை, நம்மால் அவற்றை ஏடுத்துச் செல்லவும் இயலாது. ஒரு செல்வந்தர் தனது வீட்டுப் பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார்.அந்தப் பால்கனியில் ஒரு சிறிய எறும்பு, அதனை விடப் பல மடங்குப் பெரிதான ஒரு இலையை நகர்த்திக் கொண்டே ஊர்ந்து சென்றது,. மெதுவாகவும் மிகவும் கவனமாகவும் சென்றது.

செல்வந்தருக்கு ஒரே ஆச்சர்யம்.மேலும் தரையில் ஒரு பிளவைப் பார்த்தவுடன் அது சாமர்த்யமாக இலையை அச்சிறு பிளவின் குறுக்காக வைத்து அதன் மீது ஏறிச் சென்று பின்னர் இலையை இழுத்துச் சென்றது

மேலும் பல தடங்கல்கள் அது தன் திசையைச் சற்றே மாற்றி வெற்றிகரமாக முன்னேறியது.ஒரு சிறு எறும்பின் விடாமுயற்சி, சாதுர்யம் மற்றும் புத்திசாலித்தனம் அவரை அசர வைத்தது..ஆனால் எறும்பிடம் மனிதனிடம் உள்ள சில குறைபாடுகளும் இருக்கத் தான் செய்கிறது...

எறும்பு இறுதியில் தனது இருப்பிட. இலக்கை அடைந்தது. அது எறும்புப் புற்று எனப்படும் ஒரு சிறிய ஆனால் ஆழமான குழி.. அருகே வந்த எறும்பால் அந்த இலையுடன் குழியினுள் செல்ல இயலவில்லை. அது மட்டுமே செல்ல முடிந்தது. தான் ஒருமணி நேரம் கஷ்டப்பட்டு இழுத்து வந்த இலையை குழியருகே விட்டுத் தான் செல்ல வேண்டியதாயிற்று.

இதற்கு இவ்வளவு சிரமப்பட்டு இருக்க வேண்டாமே?

மனித வாழ்க்கையும் இவ்வாறு தான். மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை ஏற்படுத்திக் கொள்கிறான். அடுக்கு மாடி வீடு, சொகுசான கார்,, ஆடம்பரமான வாழ்க்கை எனப் பலப்பல..

ஆனால், இறுதியில் அவன் கல்லறையை நோக்கிச் செல்லும் போது அவன் சேமித்த அனைத்தையும் விட்டுத் தான் செல்கிறான். இது தான் நிதர்சமான உண்மையும் கூட..

ஆம்.,நண்பர்களே...

பிறக்கும் போது எதையும் கொண்டு வருவது இல்லை. மற்றவருக்கு உதவுவதால் எதையும் இழந்து விடப் போவதும் இல்லை.

வீணாக சுமைகளைச் சேர்த்துக் கட்டி இழுக்க வேண்டாம். இறுதியில். எதுவும் நம்மோடு வரப் போவதில்லை.

ஆக்கம்: உடுமலை. சு.தண்டபாணி.

Tags

Next Story