சென்னையில் உள்ள பிரபல டிவிஎஸ் சொத்தை வாங்கும் பிரிகேட் குழுமம்

சென்னையில் உள்ள பிரபல டிவிஎஸ் சொத்தை வாங்கும் பிரிகேட் குழுமம்
X

சென்னை அண்ணா சாலையில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் சொத்து 

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட பிரிகேட் குழுமம், சென்னை அண்ணாசாலையில் உள்ள புகழ்பெற்ற TVS சுந்தரம் மோட்டார்ஸின் சொத்தை வாங்கவுள்ளது

சென்னை அண்ணாசாலையில் உள்ள டிவிஎஸ் குழும நிறுவனத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் பிரைம் சொத்தை வாங்க பிரிகேட் குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கான வழக்கமான செயல்முறை நடந்து வருகிறது. ரகசியத்தன்மை காரணமாக, இந்த நேரத்தில் விலை, வளர்ச்சியின் தன்மை போன்றவற்றை தெரியவில்லை

இந்த சொத்து, 89 கிரவுண்ட் அதாவது 2.14 லட்சம் சதுர அடி பரப்புள்ளது. டக்கே அண்ணாசாலையிலிருந்து தெற்கே ஒயிட்ஸ் சாலை வரை நீண்டுள்ளது. இது தற்போது ஹோண்டா கார்களின் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் (சுந்தரம் ஹோண்டா) கொண்டுள்ளது.

இந்த சொத்து ஒரு கிரவுண்ட்டிற்கு சுமார் 6-6.5 கோடி வரை விலை போகும். மொத்தம் ரூ.550 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
ai in future agriculture