அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
X
தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் புதிதாக 5 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க அரசு பெறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது இந்த ஓராண்டில் செய்த அரசின் சாதனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 5 புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சட்டப்பேரவை உரையின்போது அறிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

1. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.

2. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்படும்.

3. 25 மாநகராட்சிகளில் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும்.

4. ரூ.1000 கோடி ஒதுக்கீட்டில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

5. கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பது போல நகரங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 25 மாநகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்.708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.

என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!