வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
X
வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசும்போது,

அறிவு சொத்து போல் உடல் வலிமையும் ஒரு சொத்து; விளையாட்டு உடலை துடிப்புடன் வைத்துள்ளது. தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவர். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும்.

ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது; சென்னை அருகே மெகா விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. சென்னை ஓபன் டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்த, பீச் வாலிபால் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.

மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும். வட சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் குத்துச் சண்டை மைதானம் அமைக்கப்படும் என கூறினார்.

Tags

Next Story
ai marketing future