ஆர்யன் கானின் ஜாமீன் மனு விசாரணை: முகுல் ரோகத்கி ஆஜராகிறார்

ஆர்யன் கானின் ஜாமீன் மனு விசாரணை: முகுல் ரோகத்கி ஆஜராகிறார்
X

மும்பை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படும் ஆர்யன் கான்

சாட்சிக்கு ரூ. 8 கோடி பணம் அளிக்க பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆர்யன் கான் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் வருகிறது

ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அக்டோபர் 8 முதல் சிறையில் உள்ள சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் 23 வயது மகனுக்கு இரண்டு முறை ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்திய முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ஆர்யன் கான் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராவார்.

விசாரணைக்கு தலைமை தாங்கும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் அமைச்சக அதிகாரி சமீர் வான்கடே, இந்த வழக்கில் ஒரு சாட்சிக்கு ரூ.8 கோடி அளிக்க பேரம் பேசப்பட்டதாக கூறியுள்ள நிலையில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது .

கடந்த வாரம், மும்பையில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், ஆர்யன் கானின் வாட்ஸ்அப் பதிவுகளில், அவர் தொடர்ந்து சட்டவிரோத போதைப்பொருட்களை பயன்படுத்துவது தெரிய வந்ததாகவும், எனவே அவரை ஜாமீனில் வெளியே விட்டால், இதுபோன்ற குற்றங்களைச் செய்ய வாய்ப்பில்லை என்று கூற முடியாது. ஆர்யன் கானுக்கும் சப்ளையர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட்டின் ஷூவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு கிராம் போதைப்பொருள் பற்றி அவருக்குத் தெரியும் என்று நீதிமன்றம் கூறியது.

ஆர்யன் கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சதீஷ் மனேஷிண்டே மற்றும் அமித் தேசாய் ஆகியோர் வாட்ஸ்அப் அரட்டைகளை தவறாகப் புரிந்துகொண்டு அவரை சிக்கவைக்கிறது என நீதிமன்றத்தில் வாதிட்டனர்,

போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சக அதிகாரிகள் அக்டோபர் 2 ஆம் தேதி மும்பையிலிருந்து உல்லாசக் கப்பலில் சோதனை செய்த பின்னர்ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் மாடல் முன்முன் தமேச்சா மற்றும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்