கோவையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு

கோவையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு
X

பைல் படம்

கோவையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கும் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி சென்றுள்ள நிலையில், அங்கு விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு இமெயில் மூலம், குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த இ-மெயிலில் பாஜக அலுவலகம் - மோடி ஒழிக என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை மாநகர காவல் துறையினர் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அந்த இ-மெயில் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்மெயில் ஐடி சாத்தூரை சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது போலீஸ் தகவலாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!