குஷ்புவுக்கு வாழ்த்து சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை

குஷ்புவுக்கு வாழ்த்து சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை
X

பைல் படம்.

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள குஷ்புவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவினர் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, நடிகை குஷ்பு தனியார் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக நான் இருப்பேன். பெண்கள் பிரச்னைகளை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். பயப்படாதீங்க, வெளியே வாங்க, உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பாஜக சார்பில் குஷ்புவுக்கு வாழ்த்துகள். பெண்களின் உரிமைகளுக்கான அவரது விடாமுயற்சி மற்றும் போராட்டத்திற்கான அங்கீகாரம் இது என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai based agriculture in india