நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
பைல் படம்.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனைக்காக ஆன்லைன் வழியாக பதிவு செய்யும் போது, பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த முறை மூலம் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல்லைக் கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நெல் கொள்முதல் நிலையங்கள் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பயோ மெட்ரிக் கருவியை பொருத்தி விரல் ரேகை பதிவதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிந்திருக்கும் கைப்பேசி எண்ணுக்கு ஓ.டி.பி. எனப்படும் கடவுச் சொல்லை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விபரத்தை துல்லியமாக பதிவேற்றலாம்.
இந்த பயோமெட்ரிக் பதிவு மூலம் விவசாயிகளின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு கொள்முதல் நிலையங்களிலேயே நெல்லை விற்றுக் கொள்ளலாம். மேலும் பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பயோமெட்ரிக் முறை இன்று அமலுக்கு வருவதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu