/* */

கூட்டுறவுச் சங்கங்களில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது -அமைச்சர் பெரியசாமி

கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 3999 காலியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் பெரியசாமி

HIGHLIGHTS

கூட்டுறவுச் சங்கங்களில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது -அமைச்சர் பெரியசாமி
X

அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு புற்றுநோய் போல் வந்துள்ளது. காணமல் போன நகைகள் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம் மோசடி செய்தவர்கள் மீது கட்டாயம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுகவில் நெல்லை மாவட்ட பொறுப்பாளராக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி இன்று நெல்லை வந்த கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:-

கடந்த ஆட்சியில் கூட்டுறவுச் சங்கங்களில் நிலத்தின் அளவை தாண்டி அளவுக்கு அதிகமாக பயிர்க்கடன் வழங்கியுள்ளனர். உதாரணமாக 25 ஆயிரம் கடன் வழங்க வேண்டிய நிலத்துக்கு அவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். பல சங்கங்களில் மோசடியாக கடன் வழங்கி அந்த கடனையே அவர்களுக்கு வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளனர். பயிர் கடன் தள்ளுபடிக்காக இதுபோன்ற மோசடி நடைபெற்றுள்ளது. ஏட்டளவில் கணக்கு காண்பித்து பயிர் கடன் தள்ளுபடியில் அதிக முறைகள் செய்துள்ளனர். 5 சவரனுக்கு கீழ் நகை கடன் தள்ளுபடி வழங்க அரசு 6000 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் நகை கடனில் ஏராளமான தவறுகள் நடைபெற்றுள்ளது. தங்க நகைகளை அடகு வைக்காமல் போலி நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி உள்ளனர். ஒரு ஆதார் எண்ணை வைத்து ஒரே நபர் பல சங்கங்களில் 200 முதல் 600 கடன்களை வாங்கியுள்ளார். இதில் மிகப்பெரிய தில்லுமுல்லு பல சங்கங்களில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். குறைந்த வட்டி என்பதால் தனியார் வங்கிகளில் உள்ள நகைகளை திருப்பி கூட்டுறவு சங்கங்களில் மோசடியாக வைத்து கடன் பெற்றுள்ளனர். மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி பல இடங்களில் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டையை தவறாகப் பயன்படுத்தியும் லட்சக்கணக்கில் நகைக்கடன் வாங்கியுள்ளனர். தள்ளுபடி பெறுவதற்காக நகைகளை வைக்காமலையே நகை கடன் பெற்றுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் வழங்குவதற்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில் 261 பொட்டலங்களில் ஆய்வின் போது நகைகள் இருப்பு இல்லை. இருப்பு இல்லாத நகைகளின் மதிப்பு ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் ஆகும். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் நிர்வாக குழு இயக்குனர் கிருஷ்ணசாமி பத்து போலி நகை பொட்டலங்களை வைத்து 11 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய் அளவுக்கு நகை கடன் வாங்கியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்று மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களில் முறைகேடாக நகை கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே உரிய ஆய்வுக்கு பிறகு தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் நகை கடன் வழங்கப்படும். திருட்டுத்தனமாக கடன் பெற்றோர்களுக்கு சலுகை கிடைக்க கூடாது என்பதே அரசின் நோக்கமாகும். அவர்கள் அரசாங்கத்தையே கொள்ளை அடித்து விடுவார்கள். எனவே கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள் முறைகேடுகள் கண்டறியப்பட்டு தகுதியுள்ள அத்தனை பேருக்கும் கடன் தள்ளுபடி வழங்கப்படும். எவ்வளவு தொகை இதில் முறைகேடு நடந்திருக்கிறது என்பது சொல்ல முடியாது. கிலோ கணக்கில் நகைக்கடன் மோசடி நடைபெற்றுள்ளது. மொத்தம் உள்ள 4451 கூட்டுறவு கடன் சங்கங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. முழு ஆய்வுக்கு பிறகு அதிகாரிகள் உள்பட யார் யார் இந்த முறைகளில் ஈடுபட்டுள்ளார்களோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடனுக்காக பெறப்பட்ட நகைகளை யார் எடுத்துச் சென்றார்கள் என்பதை அறிய காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிய வலியுறுத்தியுள்ளோம். முறைகேடுகள் புற்றுநோய் போல் வளர்ந்துள்ளது. அவர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தவில்லை. மேலும் கூட்டுறவு கடன் சங்கங்களை மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் விரைவில் இணைக்கப்படும். அப்போதுதான் முறைகேடுகளை தடுக்க முடியும். கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 3999 காலியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் விரைவில் நிரப்பப்படும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் தங்கள் சவுகரியத்திற்காக இரண்டு கட்டமாக தேர்தலை நடத்துகிறது. உள்ளாட்சித் தேர்தல் எந்த முறைகேடும் இல்லாமல் நியாயமான முறையில் நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்தார்.

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 19 Sep 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு