பிக்பாஸ் வீட்டில் ஷிவினுடன் அடிதடியில் இறங்கிய தனலட்சுமி

பிக்பாஸ் வீட்டில் ஷிவினுடன் அடிதடியில் இறங்கிய தனலட்சுமி
X
பிக்பாஸ் வீட்டில் ஷிவினுடன் அடிதடியில் தனலட்சுமி இறங்கினார்.

விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் பொழுது போக்கு நிகழ்ச்சியை கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதியில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியானது தற்போது வேற லெவலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 54ம் நாளில் நடந்தது என்ன என்று பார்ப்போம். அதாவது இன்றுடன் ஆதிவாசிகளும் ஏலியன்சும் என்னும் டாஸ்க் முடிவடைந்தது. டாஸ்க் முடிந்ததைத் தொடர்ந்து அசீம் பூக்களைத் திருடியது நான் தான் என்று சொல்கின்றார்.

இதனால் மணிகண்டன் கடுப்பாகி அசீமிடம் பேசுகின்றார். இதில் ரச்சிதாவும் தனலக்ஷ்மியும் நிறைய பொருட்களை சேர்த்ததால் அவர்கள் எலிமினேஷன் ப்ஃரீ ஷோனுக்கு போனார்கள். அதன் பின்னர் பூட்டு டாஸ்க் நடந்தது. இதில் எந்த பூட்டும் வாங்காமல் மணிகண்டன் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து மணிகண்டன் பெஸ்ட் பொஃபோமராக தெரிவு செய்யப்பட்டார். அதே போல ஏலியன்ஸ் டாஸ்க்கில் ஷிவின் மற்றும் தனலக்ஷ்மி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் அடுத்த வாரத் தலைவர் போட்டிக்கு மூவரும் தெரிவு செய்யப்பட்டனர்.

பின்னர் வேஸ்ட் பொஃபோமராக அசீம் தெரிவு செய்யப்பட்டார். எல்லோரும் அந்த பூவை எடுத்து மறைத்து வைத்ததையே காரணமாக சொல்லி இருந்தனர்.அதே போல வீட்டில் சரியாக வேலை செய்யாதவர் என்று மைனா நந்தினி தேர்வாகினார். இவர்கள் இருவருக்கும் கழுத்தில் சிம்பிளி வேஸ்ட் என்னும் பெயரில் அட்டை போட்டு விடப்பட்டது.

இதனால் மைனா நந்தினி கடுப்பாகி இந்த வீட்டில் சிம்பிளி வேஸ்ட்டாக எவ்வளவு பேர் இருக்கிறீங்க என்னை ஏன்டா சொன்னீங்க என்று கூறிக் கொண்டு சென்றார். இதன் பின்னர் ஒரு கார் டாஸ்க் நடந்தது அதில் மணிகண்டன், கதிரவன், அசீம், ஏடிகே ஆகியோர் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
the future with ai