/* */

நாளை மகாகவி நாள் கடைபிடிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Bharathiyar Memorial Day-பாரதியாரின் நினைவுநாளான நாளை 'மகாகவி நாள்' என கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறித்துள்ளார்.

HIGHLIGHTS

Bharathiyar Memorial Day
X

Bharathiyar Memorial Day

Bharathiyar Memorial Day-தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மகாகவி பாரதியாரின் நினைவு நாளை "மகாகவி நாள்"-ஆக அனுசரிக்கப்படும் என அறிவித்திருத்தார். அதன்படி நாளை காலை 9.30 மணியளவில், அமைச்சர்கள், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

அண்ணா அவர்களால், "மக்கள் கவி" என்று அழைக்கப்பட்டார் மகாகவி பாரதியார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் நாட்டுடைமையாக்கி, நினைவு இல்லமாக மாற்றினார். 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து கருணாநிதி திறந்து வைத்தார்.

பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக தமிழ்நாடு முதலமைச்சர் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அவற்றில், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11, "மகாகவி நாள்"-ஆக கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும்.

சிறப்பு வாய்ந்த மகாகவி நாளான 11.09.2022 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 26 March 2024 5:58 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  2. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு
  3. ஈரோடு
    ஈரோட்டில் சமூக நீதிக் கூட்டமைப்பினரின் பாராட்டு விழா
  4. கடையநல்லூர்
    சுதந்திர போராட்ட தியாகி வீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள்..!
  5. சூலூர்
    சூலூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : இருவர் கைது..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் பக்ரீத் பண்டிகையையொட்டி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பக்ரீத் சிறப்பு வழிபாடு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வருகிற 22ம் தேதி அருணகிரிநாதர் அவதார நல்விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் விவசாயிக்கு டிராக்டர் : நடிகர்கள் லாரன்ஸ் , எஸ் ஜே சூர்யா ...
  10. ஈரோடு
    பக்ரீத் பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில் 150 பள்ளி வாசல்களில் சிறப்பு...