பாரதியார் நூற்றாண்டு நினைவேந்தல்: எட்டயபுரம் வருகைதரும் மத்திய, மாநில அமைச்சர்கள்

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாரமன் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
நாளை (செப்டம்பர் 12) மதியம் 12.30 மணிக்கு எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் நடைபெறவுள்ள சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
எஸ். வெங்கேடஷ்வர், தலைமை இயக்குநர் (தென் மண்டலம்), மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
அதற்கு முன்னதாக, ( செப்டம்பர் 12) காலை 10.15 மணிக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்து கொள்கின்றனர். மாலை 6.15 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ சவுடாம்பிகா பொறியியல் கல்லூரியில் மத்திய அமைச்சர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். பின்னர் அவர்கள் சென்னை திரும்புகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu