/* */

110 டிகிரி பாரன்ஹீட் வெயிலுக்கு இடையே தமிழகத்தில் பெய்தது ஆலங்கட்டி மழை

110 டிகிரி பாரன்ஹீட் வெயிலுக்கு இடையே தமிழகத்தில் இன்று வேலூர் அருகே ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

HIGHLIGHTS

110 டிகிரி பாரன்ஹீட் வெயிலுக்கு இடையே   தமிழகத்தில் பெய்தது ஆலங்கட்டி மழை
X

வேலூர் அருகே இன்று ஆலங்கட்டி மழை பெய்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு, வளத்தூர், கீழ்பட்டி, செம்பேடு உள்ளிட்ட இடங்களில் இன்று ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் தொடக்கம் முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 100 டிகிரி ஃபார்ன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. ஊட்டியே கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை சூடாகியுள்ளது.

வேலூரில் கடந்த 10 நாட்களாக 100 டிகிரி முதல்110 டிகிரி வரை வெயில் கொளுத்தி வந்தது. கடும் அனல் காற்று வீசி வந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நிலையில் இன்று மாலை குடியாத்தம், மேல் ஆலத்தூர், பேரணாம்பட்டு, செம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கூட நகரம், சின்ன சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டிய நிலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்கட்டி மழையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் மாதனுர் பகுதியில் திடீரென சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை முதல் மே 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் மே 7, மே 8 ஆகிய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 May 2024 8:14 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்