தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறையில் பெண் சிசு உடல் மீட்பு- கொலையா?

தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறையில் பெண் சிசு உடல் மீட்பு- கொலையா?
X
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறை தண்ணீர் தொட்டியில், பிறந்த பெண் சிசுவின் கண்டெடுக்கப்பட்டது; கொலை செய்யப்பட்டுள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.

தஞ்சாவூரில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வதற்கு துப்புரவு தொழிலாளிகள் இன்று சென்றுள்ளனர். அப்போது கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடியுடன் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இதனை பார்த்த துப்புரவு தொழிலாளர்கள் பதறினர்; இதுபற்றி, கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததனர். உடனடியாக கல்லூரி முதல்வர் தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, நேற்றில் இருந்து கழிவறை பகுதிக்குள் யார் யார் சென்றார்கள் என்று, அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேஇன்று காலை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைக்கு சென்ற ஒரு பெண், அரை மணி நேரம் கழித்து வெளியே வந்ததும், அந்த பெண் யார் அந்தப் பெண் குழந்தையை பெற்றெடுத்து அங்கு விட்டு சென்றாரா அல்லது குழந்தையை கொன்று தொட்டியில் வைத்து சென்றாரா என பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!