பி.ஜே.பி. அண்ணாமலை நடைபயணம் தமிழ் புத்தாண்டில் தொடங்குதுங்கோ...

அண்ணாமலை (கோப்பு படம்)
தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.தொடங்கிய பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரிலான ஒற்றுமை பயணம் தென்மாநிலங்கள் மற்றும் மத்திய மாநிலங்கள் மற்றும் டெல்லியை தாண்டி தற்போது காஷ்மீரில் நுழைந்துள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் மேலும் ஒரு பாதயாத்திரை நடைபயணம் என்ற பெயரில் தொடங்க இருக்கிறது. இந்த யாத்திரையை நடத்த போது பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை. தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்காக நடைபயணம் செல்ல இருக்கிறேன் என அண்ணாமலையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது தான் இந்த நடைபயணம். தேதி குறிப்பிடப்படாமல் இருந்த நடைபயணத்திற்கான நாள் தற்போது குறிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை கடலூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தான் அண்ணாமலையின் நடைபயணம் தமிழ்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அண்ணாமலையின் நடைபயணம் தென் தமிழகத்தின் கடலோர நகரமான திருச்செந்தூரில் துவங்குகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி நடைபெற உள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தல் பணியை சிறப்பாக செய்வதற்காக ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சி சார்பில் அண்ணாமலை தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இடைத்தேர்தல் முடிவிற்கு பின்னர் அண்ணாமலை நடைபயண பணிகளை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu